அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் லண்டன் செல்கிறார்

நமது காலத்தில் பெரும் பிரச்சனைகளை கையாளுதல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை (03) லண்டனுக்கு விஜயம் செய்கிறார்.

லண்டன் – கொன்வே மண்டபவத்தில் 5 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு அல் – ஜஷீரா தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

பொருளாதார ரீதியில் பாதாளத்தில் வீழ்ந்த இலங்கையின் மறுமலர்ச்சி திட்டம், ஊழல் மோசடி, மனித உரிமை மீறல் நெருக்கடிகளை எதிர்கொள்ளல் மற்றும் 2019 ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் போன்ற விடயங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இதனை தொடர்ந்து லண்டனில் தங்கியிருக்கும் நாட்களில் பல்வேறு அரசியல் சந்திப்புகளிலும் பங்கேற்க உள்ளார்.

Related posts

“நுவரெலியாவுக்கு செல்வோருக்கும் எச்சரிக்கை”

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியின் தந்தை உட்பட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

editor