அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

இன்று (27) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன, முன்னாள் ஜனாதிபதி இனி ஒரு கைதி அல்ல என்பதால், அவர் தனியார் வைத்தியரை அணுகலாம் என்றும் கூறினார்.

அவர் பெறும் சிகிச்சையுடன் அவரது கடுமையான நீரிழப்பு தற்போது குணமடைந்து வருவதாகவும் வைத்தியர் கூறினார்.

இதற்கிடையில், தேசிய வைத்தியசாலையில் எந்தவொரு நோயாளிக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்குவதாகவும், சேவைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் எவரும் சமமாக நடத்தப்படுவதாகவும் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஆராய தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தாலேயே குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

“நேற்றைய அறிக்கையில் அவரது கரோனரி தமனியில் முக்கால் பங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் மேலும் சிகிச்சை பெற வேண்டும் என்று நான் சொன்னேன். அதை விரைவாகச் செய்வது அவருக்கு நல்லது.

இப்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டதால், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது.

வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, அவர் இன்னும் ஓரிரு நாட்கள் தங்க வேண்டியிருக்கும்.

இருப்பினும், அவருக்கு இருந்த கடுமையான பிரச்சினை, அதாவது நீரிழப்பு தொடர்பானது, இப்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இருப்பினும், அடையாளம் காணப்பட்ட பிற நோய்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவரது நிலை மிகவும் மோசமாக இருக்கும்போது அவர் எப்படி குணமடைய முடியும்? சிகிச்சை விரைவாக செய்யப்படாவிட்டால், ஆபத்து உள்ளது.” என்றார்.

Related posts

போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!