அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் நிலைமை குறித்தும் அங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு முன்பு சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அதன் விதிகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயராம மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறினார்.

அன்றைய தினம் சீனத் தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை பேசுபொருளானது.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சமீபத்தில், தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

editor

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்!