உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த சம்பவம் – ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

2025 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த மேற்கொண்ட தீர்மானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்யுமாறு கோரி, சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ரஜித் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனு, எஸ். துரை ராஜா, குமுதுனி விக்ரமசிங்க, மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை அடுத்து, முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், இந்த மனுவை 2025 ஓகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

Related posts

திரிபோஷா பற்றிய புதிய தகவல்

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் உறுதி – பிரதமர் ஹரிணி

editor