அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது – தே.ம.ச எம்.பி அசித்த நிரோஷன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் கொழும்பு 07 விஜேராமவில் உள்ள காணியின் பெறுமதி 3357 மில்லியன் ரூபா என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன தெரிவித்துள்ளார்.

குறித்த காணி ஒரு ஏக்கர் மற்றும் 13.7 பேர்ச்சஸ் அளவு கொண்டதாகவும், காணியின் தற்போதைய பெறுமதி 3128 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காணியில் கட்டப்பட்டுள்ள மாளிகை 30354 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாகவும், மாளிகையின் தற்போதைய பெறுமதி 229 மில்லியன் ரூபா எனவும் அவர் வெளிப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியும் வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது எனவும் வீடமைப்பு அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட வீடொன்றின் அளவு சுமார் 450 சதுர அடி எனவும் அசித நிரோஷன வெளிப்படுத்தினார்.

Related posts

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

தீ பரவல் காரணமாக முற்றாக எரிந்த வீடு – மன்னாரில் சம்பவம்

editor