இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இன்று (24) சந்தித்தார்.
தங்காலையில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்துக்குச் சென்ற இந்திய உயர் ஸ்தானிகர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நலம் விசாரித்துவிட்டு பல நிமிடங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இந்திய – இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்தி உயர்ஸ்தானிகர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.