அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலமானதாக பரவும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

எனவே, இவ்வாறு பரவும் செய்தியில் எந்த ஒரு உண்மை தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள சிரேஸ்ட ஊடகவியலாளரிடம் வினவிய போது இது போலியான செய்தி என குறிப்பிட்டார்.

அந்தவகையில், இது போன்ற போலியான செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பதுடன் அவற்றை பகிர்வதையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.

Related posts

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யோஷித, டெய்ஸியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு!

editor

மின்வெட்டுக்கான பரிந்துரைகள் ஆராய்வு