உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற – உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்ப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆணைக்குழுவில் பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் பெற சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

இலங்கையிலும் தடுப்பூசி செலுத்தியோருக்கு குருதி உறைதல்

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது