அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவினால் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.