முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹெல் பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி உடல்நலக் குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.