முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயதாகும்.
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஆரம்பகால உறுப்பினரான இவர், அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
பின்னர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைந்துகொண்ட அவர், அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாணந்துறை நகர சபையின் மேயராகவும் பதவி வகித்தார்.
