முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ வுட்லர் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அதுரலியே ரதன தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.