நாடு முழுவதும் கடந்த 2022 மே மாதம் 9 ஆம் திகதி வீடுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதங்களுக்கு சட்டவிரோதமாக இழப்பீட்டைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சட்டவிரோதமாக இழப்பீடு பெற்றதால், அவர்களிடமிருந்து
இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் வழக்கறிஞர் டாக்டர் ரவீந்திரநாத் தாபரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளா.
