அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார்.

Related posts

யாழ். நல்லூர் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் ஹரிணி

editor

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்

விமானப் படையின் விமானம் விபத்து – L போட் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor