அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் சீராய்வு மனு தள்ளுபடி

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை, அவர் வாபஸ் பெற்றதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனு இன்று (02) நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், தனது கட்சிக்காரர் மனுவை வாபஸ் பெற அறிவுறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சீராய்வு மனுவை வாபஸ் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

Related posts

CID அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது!

எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை – மக்கள் நலனுக்கே முன்னுரிமை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor