முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (18) மஹர நீதவான் நீதிமன்றத்தினால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.