உடல்நலக்குறைவு காரணமாக காலமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் சடலம் கண்டி – மஹய்யாவ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) காலமானார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தனது 57 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.