முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (06) காலை நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு நாடளாவிய போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.