முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.