அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனு விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென அரசு இந்தியாவுடன் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்வதற்கான தீர்ப்பை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கனை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்றைய தினம் மூவரடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த மனுக்களை முன்னெடுத்துச் செல்ல முடியாதென சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பினை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது

Related posts

அடுத்த வருடத்தின் முதல் மாதத்தின் இறுதி வாரம் கருப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

கடமைகளை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு

UPDATE: அக்கரைப்பற்றில் தீ பிடித்த படகு : தேடுதல் வேட்டை மும்முரம்