அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சீராய்வு மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

பிணையில் விடுவிக்க மறுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

பிணையை நிராகரித்த குறித்த நீதவான் நீதிமன்ற தீர்ப்பின் நகல் மேல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாததால், இந்த மனு தொடர்பாக உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, குறித்த பிணை தீர்ப்பின் நகலைச் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவிற்கு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

அதன் பின்னர், மனு மீதான பரிசீலனை 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தை உருவாக்கி வரும் JAAF மற்றும் Solidaridad

editor

மலேசிய முன்னாள் பிரதமருக்கு தண்டனைக் காலம் குறைப்பு!

ரயில் சேவையில் பாதிப்பு