அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் – திகதி குறிப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார்.

இன்று (24) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​வழக்கு தொடர்பான பல ஆவணங்களை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிக்கு வழங்கியது.

அதன்படி, வழக்கின் விசாரணைக்கு திகதி நிர்ணயிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்தார்.

2010 முதல் 2012 ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் அமைச்சராகப் பணியாற்றியபோது தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு மேலதிகமாக சுமார்150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்துள்ளதாக மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியல்

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் 

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”