அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

அமைச்சராகப் பணியாற்றிய போது சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010 மற்றும் 2012இற்கு இடைப்பட்ட காலத்தில் அமைச்சராக பணியாற்றியபோது, தனது சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பால் 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பராமரித்ததன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

editor

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு