அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 20, 2025) ஆஜராகியுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக, முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல் பிரமுகர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்பாக, சட்டவிரோதமாக ஆடம்பரமான சொத்துக்களை, வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விசாரணை இடம்பெறுவதாக கூறப்படுகிறது

Related posts

குருநாகலில் கோர விபத்து – 4 பேர் பலி – பலர் வைத்தியசாலையில்

editor

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்