வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பி. ஹரிசன் இன்று (27) முற்பகல் 8.45 மணியளவில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார்.
குறித்த பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்திருந்தார்.
