முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திலிருந்து இன்று வியாழக்கிழமை (11) வாபஸ் பெற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டி அவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா பணத்தை கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது