அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸிடம் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு!

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வாக்கு மூலமளிப்பதற்காக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (31) ஆஜராகியிருந்தார்.

இதன்போது, டிரான் அலஸிடமிருந்து 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

editor

உதுமாலெப்பை எம்.பி க்கு புதிய நியமனம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

editor

18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்தி தாக்குதல் – மூவர் கைது

editor