அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் டக்ளஸை சிறையில் சந்தித்த நாமல் எம்.பி

மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றுமுன்தினம் நாமல் எம்.பி. சந்தித்த அதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோஹன் பெர்னாண்டோவையும் சந்தித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை [VIDEO]

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு

editor

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் உதவி

editor