அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது, ‘சதொச’ நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது

கல்முனை, மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு – ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

editor