அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (05) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரும், அவரது இளைய மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பனிக்குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு

editor

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்