முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக மேல் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஊடக அமைச்சராக இருந்தபோது அரசியல் நோக்கங்களுக்காக 600 GI குழாய்களை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது.
இருப்பினும், நீதிபதி விடுமுறையில் இருப்பதால் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்ற பதிவாளர் இன்று (05) அறிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த வழக்கை ஜூலை 10 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.