இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட மனுக்கள் தொடர்பில் ஆரம்பக் காரணிகளைக் கருத்தில் கொண்டதன் பின்னர், ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
