முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கினை டிசம்பர் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் செயற்பாடுகளுக்கு ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 9 இலட்சத்து 90 ரூபாவை செலவிட்டு ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சியங்களை பதியும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
