அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிரதிவாதிகளை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை பெறவும் உத்தரவிடப்பட்டது.

97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததற்காக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

Related posts

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.