உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிப் பெண்ணாக பணி புரிந்த எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ராஜபக்க்ஷ சுபசிங் பத்திரானவின் நிபுனி கிருஷ்ணஜினாவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (11) கைது செய்துள்ளனர்.

சுகாதார அமைச்சுக்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான விசாரணையின்போதே ​​இந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Related posts

விலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு