அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோர், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என கூறினார்.

இது தொடர்பில் பரிசீலித்த நீதவான், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பாராளுமன்றம்

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 விசாரணைக்கு

 வத்தளையில் வாகன விபத்து