உள்நாடு

முன்னறிவிப்பு இன்றி கட்டுநாயக்கவில் திடீரென மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை – 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு [VIDEO]

இன்றைய வெப்பச்சுட்டெண்