வகைப்படுத்தப்படாத

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண முதலமைச்சர்  சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இ முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா;கள்  ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை ஆளவிடுஇ மக்களுக்கான ஆளுநரை சந்திக்க மறுத்தவா;கள்

பதவிக்காக ஆளுநரின் காலில்ஊழலுக்குத் துணை நின்றால்தான் பதவியில் நீடிக்கலாமா?  தமிழரசுக் கட்சியே முதல்வரும் ஊழலுக்கு உடந்தையாக வேண்டுமா? முன்னுதாரணமான முதலமைச்சரின் செயலுக்கு தடையா?  நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடன் இரத்துச் செய் எங்கள் முதல்வர்; எங்களுக்கு வேண்டும் பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசுக் கட்சி  நீதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்  நீதியின் குரலை நீக்குவதற்கு நீங்கள் யார்;? குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா? பதிவி ஆசையே நம்பிக்கையில்லா பிரேரணைஇ ஊழலை மறைக்க எதிரியுடன் கூட்டா? தமிழரசு கட்சியே நீ இலங்கை அரசின் கை கூலியா?   போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

අර්ජුන් ඇලෝසියස් ඇතුලු 7කට අධිචෝදනා භාර දී ඇප මත මුදාහරි.

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

காலநிலை மாற்ற அறிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை