உள்நாடு

முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்ற ஆதிவாசிகள்!

(UTV | கொழும்பு) –

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டனர். இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்பாணத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வு நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற இடங்களான யாழ்ப்பாணம் மத்திய நாகவிகாரைக்கும், நயினாதீவு நாகதீபம் விகாரைக்கும், சென்று வழிபாடுகள் செய்துவிட்டு, வரலாற்று சின்னங்களையும் சுற்றி பார்வையிட்ட பின்னர் மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லயுள்ளனர். இதில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரட்ன, பொலிஸார், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

நாமலின் சட்டப் பட்டம் போலியானது என்கிறார் துஷார ஜயரத்ன

editor