புத்தளம் கரைத்தீவு சின்ன நாகவில்லு பிரதேச மக்கள் “முட்டுக்காலில்” தண்ணீருக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்கின்றார்கள் என்று குற்றம் சுமத்திய புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
புத்தளம் கரைத்தீவு சின்ன நாகவில்லு பிரதேசம் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்ததில் பாதிப்படைந்து இன்னும் மீள முடியாது இருக்கின்றது.
அந்த பிரதேசத்தில் வாழும் சுமார் 26 குடும்பங்கள் முழுமையாக பாதிப்டைந்து மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 45 நாட்களாக இந்த அனர்த்தத்தில் பாதிப்படைந்து, அரசாங்கத்தின் எந்த வித உதவியும் இன்றி உதவிகளுக்காக, மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க வழிகளை தேடிக் கொண்டிருக்கும் போது,
ஆளும் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள் குறித்த பிரதேச மக்கள் “முட்டுக்காலில் நின்று கொண்டு பொய் சொல்கின்றார்கள்” என சின்ன நாகவில்லு மக்கள் மீது ஒரு பாரிய குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலே தெரிவித்திருந்தார்.
எனவே நாம் ஏற்கனவே குறித்த பிரதேசத்திற்கு சென்று நிலமைகளை ஆரய்ந்து, எமக்கு இயன்ற வழியிலும், இன்னும் ஊடகங்களின் ஊடாகவும் ஜானாதிபதி மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றோம்.
இவ்வாறான நிலையில், தமது வாழ்க்கையை மீண்டும் தொடர,தமக்கான வீடுகளை பெற்றுக் கொள்ள வழிகளை தேடி நிற்கும் போது, உண்மைக்கு புறம்பாக பேசியது மாத்திரமின்றி,புத்தளம் தொகுதியின் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், அவர்களது உண்மைய நிலையை மறைத்து, அவர்களது துயரத்தில் பங்கு கொள்ளாது பாராளுமன்றத்தில் அவர்கள் மீது பலி சுமத்தியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
45நாட்களாக இன்னும் வெள்ள நீர் குறையாத நிலையில், அவர்களுக்காக அரசாங்கம் அறிவித்த எந்த நிவாரணமும் இன்னும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கான நிரந்தர தீர்வையும், மீண்டும் வாழ்கையை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக முன் வரவேண்டும் எனவும் இச் சந்தர்ப்பத்திலே வேண்டுகோள் ஒன்றையும் முன் வைக்கின்றோம்.
நன்றி.
புத்தளம் மாநகர சபை உறுப்பினர்,
ரணீஸ் பதூர்தீன்..
