உள்நாடு

முடிவுக்கு வந்த ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

அதன்படி, இன்று (18) முதல் ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ரயில் நிலைய அதிபர்கள் கடந்த 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தினசரி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், நேற்றும் நேற்று முன்தினம் இரவும், இரவு நேர தபால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன எச்சரித்துள்ளார்.

Related posts

ராஜகுமாரி மரணம் தொடர்பில் மனோவுக்கும், அரசு தரப்பு எம்பிகளுக்குமிடையில் மோதல் (VIDEO)

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

கோட்டாபய தலைமறைவாகவில்லை – பந்துல