அரசியல்உள்நாடு

முடியாது என்றால் பதவியை இராஜினாமா செய்யலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்கள அதிகாரிகள், ரயில்களை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுடன் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உங்கள் ரயிலில் ஜன்னல்களை மூட முடியாது. ஆவர்கள் சரி செய்வதாக சொல்கின்றனர். ஜயன்னல்களை மூடின பின்னர் சூடாவும் எரியுது. ஒரு தொலைபேசி வேலை செய்யவில்லை.

காலியில் இருந்து கொழும்புக்குப் போக இரண்டரை மணி நேரம் ஆகும், கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை. ரயில்கள் அலுவலக ரயில்கள்.

முறையாக வேலைக்கு ஆட்களை செயற்படுத்த முடியாதா?

இவர்கள் மக்கள் மீது மரியாதை இல்லாதவர்கள். ஜா-எலயை சேர்ந்த சின்னக் குழந்தை ஒன்று ரயிலில் போகும்போது ஜன்னலிலிருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்ததாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

இன்று முதல் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதி