உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – தெஹிவளை, பெல்லன்தர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

யானை தந்தங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

editor

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்