உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் மோதி விபத்து – 6 பேர் காயம்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

அரசுக்கான இறுதி எச்சரிக்கை இது – CEB

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு