முச்சக்கர வண்டி – கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (17) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தில் புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பெண்னின் பிரேதம் தற்போது புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்