வகைப்படுத்தப்படாத

முகாம்களில் – குழந்தைகளுக்கு பால்மா வழங்குவதை தவிருங்கள்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பால்மா வழங்குவதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு பால்மா வழங்கும் போது, வயிற்றோட்டம் முதலான நோய்கள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் விசேட நிபுணர் ஹிரம்யா ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாய்ப்பாலூட்டல் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. இதனைப் பின்பற்றி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட வயதுடைய பிள்ளைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது மிகவும் பொருத்தமானதென டொக்டர் ஜயவிக்ரம கூறினார்.

Related posts

மீட்பு பணியில் முப்படை, இந்திய அன்புலன்ஸ் வண்டிகள்

மன்னிப்பு கோரிய சக்கர்பேக்

புதிய இராணுவத்தளபதி உத்தியோகபூர்வமாக பதிவியேற்பு