வகைப்படுத்தப்படாத

முகப்பரு பிரச்சினையா?நிரந்தராமாக போக்க சில டிப்ஸ்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும்.

முகப்பரு உள்ளவர், துரித உணவுகள், சாக்லேட், கேக், பிஸ்கெட் சாப்பிட்டால் முகப்பரு வரும்.

அடிக்கடி முகத்தில் கைவைத்துக்கொண்டே இருந்தாலும் பருக்கள் அதிகமாக வரும். பரவவும் செய்யும். ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் அல்லது ஃபேஸ் வாஷ் பவுடரால் முகத்தைக் கழுவுங்கள்.

தலையில் பொடுகு, தலைமுடி சுத்தமில்லாமல் இருந்தாலும் பரு வரும். வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடி சுத்தப்படுத்துங்கள். முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தலாம். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்க கூடாது.

துளசி இலை பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமிட்டி ஒரு ஸ்பூன் நன்றாக கலந்து  அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

 

 

Related posts

காலநிலை

VIP security personnel attack van in Kalagedihena

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா