வகைப்படுத்தப்படாத

முகப்பருக்களால் பிரச்சினையா? இதோ சில நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும்.

வயிறு சுத்தமின்மை, மலச்சிக்கல், சுகாதாரமின்மை, ஒத்துக்கொள்ளாத மேக் அப் மேக் அப் பிரஷ், சுத்தமின்மை, தலைமுடியிலிருந்து பரவுதல், பொடுகு, துடைக்கும் துண்டு, எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், சீபம் சுரப்பு அதிகமாக இருப்பது ஹார்மோன் பிரச்சனை, உடல்பருமன், கெட்ட கொழுப்பு உடலில் இருப்பது, தலையணை உறை, மலத்தைக் கழிக்காமல் அடக்குதல், உடல் சூடு, தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளால் வருகிறது.

* ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ வராது.

* பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.

* வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

* ஜாதிக்காயை சிறிது ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள். அதேபோல சந்தன கட்டையை ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.

 

 

 

 

 

 

Related posts

தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு

பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ

Sri Lanka unhappy with India’s budget allocation, keen for review