வகைப்படுத்தப்படாத

முகக்கவசம் அணியாதோருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

இதே வேளை வீதியில் முகக்கவசம் இன்றி பயணித்தவர்கள் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு பணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

நீங்கள் முதியவரா ? பிள்ளைகள் கவனிப்பதில்லையா ? அழையுங்கள் 118

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்.