உள்நாடு

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது

(UTV|கொழும்பு) – முகக்கவசங்ககளுக்கான அதிக பட்ச சில்லறை விலையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

தேசிய மருந்துக ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகவும், 95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இந்த வர்தமானி அறிவித்தலின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

Related posts

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF

சந்தா கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

எரிபொருள் விலைகள் குறைப்பு – முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் அதிரடி தீர்மானம்

editor